search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேர்தல் கமிஷன்"

    • 93 தொகுதிகளுக்கு 5-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
    • பதிவான வாக்குகள் 8-ந்தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படுகின்றன.

    அகமதாபாத் :

    182 உறுப்பினர் கொண்ட குஜராத் சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. இதில் தெற்கு குஜராத் மற்றும் கட்ச்-சவுராஷ்டிரா பிராந்தியங்களுக்கு உட்பட்ட 89 தொகுதிகளில் முதல் கட்டமாக நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடந்தது.

    19 மாவட்டங்களை சேர்ந்த இந்த தொகுதிகளில் காலை 8 மணி முதலே பரவலாக விறுவிறுப்பான வாக்குப்பதிவு காணப்பட்டது. இந்த வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு முடிவடைந்தது.

    அப்போது 59.24 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்ததாக தேர்தல் கமிஷன் அறிவித்து இருந்தது.

    ஆனால் 5 மணிக்கு முன்னரே வாக்குச்சாவடிகளுக்கு வந்த வாக்காளர்கள் தொடர்ந்து வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். இதனால் வாக்குப்பதிவு மேலும் அதிகரித்தது.

    இதன்மூலம் மொத்தம் 63.14 சதவீத வாக்குகள் இறுதியில் பதிவாகி இருந்தது. இறுதி நிலவரத்தை தேர்தல் கமிஷன் நேற்று வெளியிட்டது.

    இந்த தொகுதிகளில் கடந்த 2017-ம் ஆண்டு நடந்த தேர்தலில் 66.75 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

    நேற்று முன்தினம் நடந்த தேர்தலில் அதிகபட்சமாக நர்மதா மாவட்டத்தில் 78.24 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. பழங்குடியினர் அதிகம் வாழும் இந்த மாவட்டத்தில் வாக்களிக்க மக்கள் அதிகம் ஆர்வம் காட்டினர்.

    பழங்குடியினரின் ஆதிக்கம் மிகுந்த மற்றொரு மாவட்டமான தபி மற்றும் நவ்சாரி மாவட்டங்களில் முறையே 76.91 மற்றும் 71.06 சதவீத வாக்குகள் பதிவாகின.

    இந்த தகவல்களை தேர்தல் கமிஷன் வெளியிட்டு இருக்கிறது.

    மாநிலத்தில் மீதமுள்ள 93 தொகுதிகளுக்கு வருகிற 5-ந்தேதி (நாளை மறுதினம்) வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    பின்னர் 2 கட்ட தேர்தலிலும் பதிவான வாக்குகள் அனைத்தும் 8-ந்தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படுகின்றன.

    • தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் 4 கட்சிகள் மட்டுமே விளக்கம் அளித்திருந்தன.
    • செயல்படாத கட்சிகளின் பெயர் பட்டியல் தேர்தல் கமிஷனின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

    சென்னை :

    இந்திய தேர்தல் கமிஷன் சமீபத்தில் நாடு முழுவதும் உள்ள பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் பற்றிய தகவல்களை திரட்டியது. அதில், தேர்தலில் பங்கேற்காத கட்சிகள், கணக்குகளை உரிய வகையில் காட்டாத கட்சிகள் ஆகியவற்றின் பெயரை மாநில வாரியாக தேர்தல் கமிஷன் பட்டியலிட்டு வெளியிட்டது. இதில் தமிழகத்தில் பதிவு செய்யப்பட்ட 233 கட்சிகளில் செயல்பாடில்லாத பல கட்சிகள் இடம்பெற்றிருந்தன.

    அந்த கட்சிகளுக்கு 30 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று தேர்தல் கமிஷன் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் 4 கட்சிகள் மட்டுமே விளக்கம் அளித்திருந்தன. தேர்தல் கமிஷன் அளித்த காலக்கெடு முடிந்ததைத் தொடர்ந்து, 233 பதிவு செய்யப்பட்ட கட்சிகளில் 23 கட்சிகள் எந்த தேர்தலிலும் போட்டியிடவில்லை என்பதும் வருமானவரி கணக்கு தாக்கல் செய்யவில்லை என்றும் தெரியவந்தது.

    உரிய கால அவகாசத்தில் விளக்கம் அளிக்காத நிலையில், அக்கட்சிகளை பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் பட்டியலில் இருந்து நீக்கி இந்திய தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. மேலும், உரிய விளக்கம் மற்றும் கணக்குகளை அளிக்கும் பட்சத்தில் மீண்டும் பட்டியலில் அந்தக் கட்சிகளின் பெயர் இணைக்கப்படும் என்று தேர்தல் கமிஷன் கூறியுள்ளது. இந்நிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் 4 கட்சிகள் விளக்கம் அளித்துள்ளன. அந்த விளக்கம் தேர்தல் கமிஷனுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    இவை தவிர, எந்த தேர்தலிலும் போட்டியிடாமல், வருமான வரி உள்ளிட்ட கணக்குகளையும் காட்டாமல், கமிஷனிடம் அளித்த முகவரியில் செயல்படாமல், தொடர்பு கடிதங்கள் திரும்பி வந்த நிலையில் உள்ள 22 கட்சிகளை செயல்படாத கட்சிகளாக தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. அந்தக் கட்சிகளின் பெயர் பட்டியல் தேர்தல் கமிஷனின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

    • இதற்கான அறிவிக்கை வருகிற 7-ந்தேதி வெளியிடப்படுகிறது.
    • நவம்பர் 6-ந்தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

    புதுடெல்லி :

    பல்வேறு காரணங்களால் 6 மாநிலங்களுக்கு உட்பட்ட 7 சட்டசபை தொகுதிகள் காலியாக உள்ளன. அந்தவகையில் பீகாரின் மோகமா, கோபால்கஞ்ச், மராட்டியத்தின் அந்தேரி கிழக்கு, அரியானாவின் ஆதம்பூர் ஆகிய தொகுதிகள் காலியாக உள்ளன.

    இதைப்போல தெலுங்கானாவின் முனுகோடு, உத்தரபிரதேசத்தின் கோலா கோரக்நாத், ஒடிசாவின் தாம்நகர் ஆகிய தொகுதிகளிலும் எம்.எல்.ஏ.க்கள் இல்லை.

    எனவே இந்த தொகுதிகளுக்கு தேர்தல் கமிஷன் இடைத்தேர்தல் அறிவித்தது. அதன்படி, இந்த தொகுதிகளில் அடுத்த மாதம் (நவம்பர்) 3-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதற்கான அறிவிக்கை வருகிற 7-ந்தேதி வெளியிடப்படுகிறது. அன்றே வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. இதற்கான இறுதிநாள் வருகிற 14-ந்தேதி ஆகும்.

    15-ந்தேதி வேட்புமனு பரிசீலனை நடக்கிறது. வேட்புமனுக்களை திரும்பப்பெற கடைசி நாள் 17-ந்தேதி ஆகும். இந்த இடைத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் நவம்பர் 6-ந்தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

    இந்த தகவல்களை தேர்தல் கமிஷன் வெளியிட்டு உள்ளது.

    • புதுடெல்லி, மராட்டியம், பீகார், ஒடிசா, தெலுங்கானா, உத்தரபிரதேசம் மற்றும் அரியானா ஆகிய மாநிலங்களில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.
    • வேட்புமனுவை வாபஸ் பெற அக்டோபர் 17ம் தேதி கடைசி நாள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    6 மாநிலங்களில் காலியாக உள்ள 7 சட்டசபை தொகுதிகளுக்கும் நவம்பர் 3-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம தெரிவித்துள்ளது. இந்த தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நவம்பர் 6-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. இடைத்தேர்தல் குறித்த அதிகாரப்பூர்வ அரசு அறிக்கை அக்டோபர் 7-ம் தேதி வெளியிடப்படும் என்றும் தேர்தல் நடைபெறும் அந்தந்த தொகுதிகளில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அன்றிலிருந்து அமலுக்கு வரும் என்றும் கூறப்பட்டுள்ளது.

    மேலும், வேட்புமனு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு அக்டோபர் 14ம் தேதி வரை என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை அக்டோபர் 15ம் தேதி நடைபெறுகிறது. வேட்புமனுவை வாபஸ் பெற அக்டோபர் 17ம் தேதி கடைசி நாள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, பீகார் (மோகமா, கோபால்கஞ்ச்), மராட்டியம் (அந்தேரி கிழக்கு), அரியானா (அதம்பூர்), தெலுங்கானா (முனுகோட்), உத்தரபிரதேசம் (கோலா கோக்கர்நாத்), ஒடிசா (தாம்நகர்) ஆகிய 6 மாநிலங்களில் காலியாக உள்ள 7 சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • 253 கட்சிகள் செயல்படாதவை என அறிவிக்கப்பட்டுள்ளது.
    • 2,100 கட்சிகள் விதிகளை பின்பற்றாதது கண்டுபிடிக்கப்பட்டது.

    புதுடெல்லி :

    மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951-ன் தொடர்புடைய பிரிவுகளின்படி, தேர்தல் கமிஷனில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள், கட்சியை பதிவு செய்ததில் இருந்து 5 ஆண்டுகளுக்குள் தேர்தல் கமிஷன் நடத்தும் தேர்தல்களில் பங்கேற்க வேண்டும்.

    இல்லாவிட்டால் அந்த கட்சி நீக்கப்படும். இந்தியாவில் சுமார் 2,800 கட்சிகள் தேர்தல் கமிஷனில் பதிவு செய்யப்பட்டு, தேர்தலில் உரிய பிரதிநிதித்துவம் பெறாமல் அங்கீகரிக்கப்படாத கட்சிகளாக உள்ளன. இவற்றில் சுமார் 2,100 கட்சிகள் மேற்கண்ட விதிகளை பின்பற்றாதது கண்டுபிடிக்கப்பட்டது.

    தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா, பீகார், டெல்லி உள்ளிட்ட மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள் இதுகுறித்து இந்திய தேர்தல் கமிஷனுக்கு புகார் தெரிவித்தனர்.

    இதன் அடிப்படையில் அந்த கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாக கடந்த மே மாதம் இந்திய தேர்தல் கமிஷன் அறிவிப்பு வெளியிட்டது. ஆனால் அதன்பிறகும் சம்பந்தப்பட்ட பல கட்சிகள், தவறுகளை சரி செய்வது தொடர்பாக தேர்தல் கமிஷனை நாடவில்லை.

    இதனால் தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ்குமார், தேர்தல் கமிஷனர் அனுப் சந்திரபாண்டே ஆகியோரது தலைமையிலான இந்திய தேர்தல் கமிஷன் குறிப்பிட்ட அந்த கட்சிகள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது.

    அதாவது 86 கட்சிகள், பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத கட்சிகளின் பதிவேட்டில் இருந்து நீக்கப்படும் என்றும், 253 கட்சிகள் செயல்படாதவை என பதிவேட்டில் குறிப்பிடப்படும் என்றும் தேர்தல் கமிஷன் நேற்று அறிவித்தது. இந்த கட்சிகள் தேர்தல் சின்னங்கள் பெற தகுதியற்றதாக ஆக்கப்பட்டு உள்ளன.

    ஏற்கனவே 198 கட்சிகள் இதுதொடர்பாக நீக்கம் செய்யப்பட்டு உள்ளன. தற்போது நீக்கம் செய்யப்படும் 86 கட்சிகள் மற்றும் செயல்படாத 253 கட்சிகளையும் சேர்த்து கடந்த மே 25-ந் தேதிக்கு பிறகு இதுவரை 537 கட்சிகள் மீது தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×